விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி!

இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில், சரித் அசலங்க 65 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 276 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி, 49.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் தீபக் சஹர் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய இந்திய அணி 2-0 என்ற அடிப்படையில் ஒரு நாள் சர்வதேச தொடரை கைப்பற்றியது.

Related Articles

Back to top button