விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

அதற்கமைய, இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வெற்றி – தோல்வி இன்றி சமநிலையில் நிறைவுபெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிவெற்றிபெற்றது. இந்நிலையில், கடந்த 24 ஆம்திகதி 2 ஆவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில்  378 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து, தமது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, 273 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்பின்னர், 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 231 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில், 508 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி இறுதி நாளான இன்று 261 ஓட்டங்களை மாத்திரம் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

எவ்வாறாயினும், இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர், 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.

ஆட்டநாயகனாக தனஞ்சய டி சில்வாவும், தொடரின் வீரராக பிரபாத் ஜயசூரியவும் தெரிவாகியுள்ளனர். பிரபாத் இரண்டு போட்டிகளும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Articles

Back to top button