செய்திகள்

இரண்டாவது நாளாகவும் ’ஒன்லைன்’ இல்லை.!

இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிருந்து விலகி ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்கப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தத் தொழிற்சங்க போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், அதிபர் சேவையாளர் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் ஆதரவு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக முன்னெடுக்கப்பட்டு வந்த இணைய மூலமான கற்பித்தலில் இருந்து நேற்று (12) முதல் விலகுவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு 08 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்படட நிலையில், இவர்களில் தேரர்கள் இருவர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 11 பேர் கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தியமை அரச அடக்குமுறையின் உச்சக்கட்டமாகவே கருத முடியும் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button