நுவரெலியாமலையகம்

இரண்டு பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கி பலி

வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.சரவணன் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பித்துள்ளது.

இந்த திருவிழாவை முன்னிட்டு வீதி மற்றும் ஆலயத்தின் அலங்காரத்துக்காக அத்தோட்டத்தின் தொழிற்சாலையிலிருந்து வரும் பிரதான மின் இணைப்பிலிருந்து மின்சாரத்தை பெறும் முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது, ஏற்பட்ட விபத்தில் அதிக மின்சார பாய்ச்சலுக்கு இலக்காகி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button