...
செய்திகள்

இரத்தினபுரிநகர்- அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத இரத்தினசபேசர் திருக்கோயில் 

இரத்தினபுரி நகரினிலே கோயில் கொண்ட சிவனே 
இனிமை நிறை வாழ்வுக்கு வழியமைப்பாய் ஐயா 
மலை சூழ்ந்த பெருநிலத்தில் உறைகின்ற சிவனே 
மன அமைதி தந்து எம்மை வாழவைப்பாய் ஐயா 
இரத்தினசபேசர் என்ற நாமம் கொண்ட சிவனே 
இதயசுத்தியான வாழ்வுக்கு வழியமைப்பாய் ஐயா 
 எழில் பொங்கும் திருவிடத்தில் உறைகின்ற சிவனே 
உறுதி கொண்ட மனம் தந்து வாழவைப்பாய் ஐயா 
அன்னை திரிபுரசுந்தரியை அருகு கொண்ட சிவனே 
அச்சமில்லா வாழ்வுக்கு வழியமைப்பாய் ஐயா 
பெருநகரச் சூழலிலே உறைகின்ற சிவனே 
பொறுமை கொண்ட மனதுடனே வாழவைப்பாய் ஐயா 
வில்வையைத் தலவிருட்சமாகக் கொண்ட சிவனே 
விரக்தியில்லா வாழ்வுக்கு வழியமைப்பாய் ஐயா 
நல்ல மனம் கொண்டோர் மனம் உறைகின்ற சிவனே 
நம்பிக்கை கொண்ட மனதுடனே வாழவைப்பாய் ஐயா 
களுகங்கை பெருநதியில் தீர்த்தமாடும் சிவனே
கவலையில்லா வாழ்வுக்கு வழியமைப்பாய் ஐயா 
உலகமெங்கும் உறைகின்ற பேரருளே சிவனே 
உயர் சிந்தை கொண்ட மனதுடனே வாழவைப்பாய் ஐயா 
பங்குனி உத்தரத்தில் தீர்த்தமாடும் சிவனே 
பண்பான வாழ்வுக்கு வழியமைப்பாய் ஐயா 
நித்தம் எங்கள் மனங்களிலே உறைகின்ற சிவனே 
நேர்மை கொண்ட மனதுடனே வாழவைப்பாய் ஐயா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen