ஆன்மீகம்

இரத்தினபுரி – அருள்மிகு இரத்தினேசுவரம் சிவன் திருக்கோயில்

சப்பிரகமுவ மாகாணம் – இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி நகர் அருள்மிகு இரத்தினேசுவரம் சிவன் திருக்கோயில்

நீர் வளமும் நிலவளமும் நிறைந்த பெரு நிலத்தில்
கோயில் கொண்டு அருளும் எங்கள் சிவனே
நாட்டினிலே நல்லாட்சி நாளும் நிலைத்துவிட
கருணை செய்வாய், காப்பளிப்பாய் அன்னை திரிபுர சுந்தரியுடன் உறையும் சிவனே சரணம்

இரத்தினபுரி மாநகரின் மத்தியிலே அமர்ந்தருளும்
பேரருளே எங்கள் உயிரான சிவனே
மனஞ்சலியா நிலை தந்து வாழ்வில் நிலைத்த நலம் காப்பாய்
அன்னை திரிபுர சுந்தரியுடன் உறையும் சிவனே சரணம்

தமிழ் மொழிக்கு உயிர்தந்து தரணியிலே உயர்வுதந்து
பெருமை தந்து வாழவைக்கும் எங்கள் சிவனே
ஒழுக்கம் நிறை நிறை வாழ்வை என்றும் எமக்களிப்பாய்
அன்னை திரிபுர சுந்தரியுடன் உறையும் சிவனே சரணம்

இரத்தின சபேசரென்ற திருநாமம் கொண்டவரே
இப்புவியில் வாழும் உயிர்க் கெல்லாம் வளங் கொடுக்கும் எங்கள் சிவனே
நற்கருணை தந்தெம்மை என்றும் காத்திடுவாய்
அன்னை திரிபுர சுந்தரியுடன் உறையும் சிவனே சரணம்

கங்கை அம்மை முடிகொண்டு எம் கருத்தினிலே நிலைத்திருந்து
கவலைகளைப் போக்கிவிடும் எங்கள் சிவனே
என்றும் உந்தன் அருளாலே ஆறுதலைத் தந்திடுவாய்
அன்னை திரிபுர சுந்தரியுடன் உறையும் சிவனே சரணம்

அண்டமெல்லாம் அணைத்துக் காத்து ஆதரித்து
அரவணைக்கும் எங்கள் சிவனே
உன் கருணைப் பெருவெள்ளம் எமையாட்கொள்ளச் செய்வாய்
அன்னை திரிபுர சுந்தரியுடன் உறையும் சிவனே சரணம்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button