நிகழ்வுகள்

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் 500 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் பகிர்ந்தளிப்பு.

இரத்தினபுரி உதவும்கரங்கள் அமைப்பின் மூலம் 500 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் நேற்று (18/05) வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த உதவித்திட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயண கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்களை தெரிவு செய்து வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உலர் உணவுப்பொருட்கள் “நேசக்கரம் நீட்டும் உதவும் கரங்களின் உதவும் கரம்” எனும் தொனிப்பொருளில் நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை ,களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Back to top button