செய்திகள்பதுளைமலையகம்

இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலத்திற்கு 5 ஏக்கர் புதிய காணி!

இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால தேவையாக காணப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய தமிழ் பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு தேவையான காணியினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதமரின் இணைச் செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமாகிய செந்தில் தொண்டமான் அவர்களின் முயற்சியில் நேற்று அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அவர்களையும் பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்துடனும் வேண்டுகோள் விடுத்ததற்கமைய 5 ஏக்கர் அளவிலான காணியினை பெற்றுக்கொடுக்க பலாங்கொடை பெருந்தோட்ட கம்பெனி இணக்கப்பாட்டினை வழங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக இரத்தினபுரி பிரதேசத்திற்கு பாரிய மழை வீழ்ச்சி பதிவான நிலையில், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலத்தில் காணப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் கல்லூரியின் பிரதான மண்டபம் சேதத்திற்குள்ளானது.

அதனை தொடர்ந்து பல தரப்பட்ட முயற்சிகளின் பலனாக இரத்தினபுரி புதிய நகரத்தினை அண்மித்த பாம்கார்டன் தோட்டத்தின் வெரழுப்ப பிரதேசத்தில் அமைந்துள்ள ஐந்து ஏக்கர் காணியினை பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி திரு.வெக்குனகொட அவர்களால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களிடம் குறித்த காணியினை வழங்குவதற்கான ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button