செய்திகள்

இரத்தினபுரி திருவானைகெட்டிய ஸ்ரீ கதிர் வேலாயுத கோயில்..

இரத்தினபுரி- திருவானைக்கட்டி அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் 
இட்டது தான் சட்டமென எண்ணியிருப்போரின்
கொட்டமதை அடக்க எழுந்துவா கதிர்வேலா 
சட்டங்கள் யாவர்க்கும் சமமென்று உணர்த்திவிட
எட்டுத்திக்கும் ஒலியெழுப்ப விரைந்துவா வேலவனே
இரத்தினபுரி மாநகரில் கோயில் கொண்ட குமரேசா
வழிகாட்டி நெறிப்படுத்த எழுந்துவா கதிர்வேலா 
கேட்கும் வரம் தந்தெமது குறைகளைய முன்வந்து 
ஏற்ற நலம் அருளிடவே விரைந்துவா வேலவனே
நெடுஞ்சாலை மருங்கினிலே அமர்ந்தருளும் திருமுருகா 
நேர்மையுடன் வாழ வழிகாட்ட எழுந்துவா கதிர்வேலா 
ஒழுக்கம் பிறழாது உயர்வு நிலை பெற்றிடவே
அறிவுதந்து வழிநடத்த விரைந்துவா வேலவனே
திருவானைக்கட்டியில் ஒளி விளக்காய் அமர்ந்தவனே
திருவருளின் துணைதரவே எழுந்துவா கதிர்வேலா 
திசைதவறா வழிசென்று சீர்மையுடன் வாழ்ந்திடவே
ஆற்றல் தந்து அரவணைக்க விரைந்துவா வேலவனே
நானென்ற அகந்தையினை அழிக்க வரும் கதிரேசா
நாமென்று ஒன்றுபடும் வழிகாட்ட எழுந்துவா கதிர்வேலா 
பணத்தாசை கொண்டு வழிதவறிச் செல்பவர்கள்
நல்வழியில் செல்ல வழிகாட்ட விரைந்துவா வேலவனே
தமிழ் தெய்வம் நீயென்று தரணி போற்றும் ஆறுமுகா
தவறான வழிசெல்வோர் வழி தடுக்க எழுந்துவா கதிர்வேலா 
எப்பொழுதும் உன்கோயில் எங்களதாய் இருந்துவிட
ஏற்றவருள் தந்து உரித்துடையதாக்கிடவே விரைந்துவா வேலவனே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen