செய்திகள்

இரத்தினபுரி நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உட்பட 14 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இரத்தினபுரி நகரில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இன்று (21) ஈடுபட்டன.

சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப் பெறுமாறு வலியுறுத்தியும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோரியும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்துமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் அதிபர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோசமிட்டவாறு இரத்தினபுரி நகரில் ஊர்வலமாகச் சென்று இரத்தினபுரி மணிக்கூட்டு கோபுரத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக இரத்தினபுரி நகரில் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

Related Articles

Back to top button