காலநிலைசெய்திகள்

இரத்தினபுரி, நுவரெலியா உள்ளிட்ட 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!

தற்போது நிலவுகின்ற அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் உள்ள 10 பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் கட்ட அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், களனி, களு, ஜின் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், பல பகுதிகளில் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வௌ்ளம் தொடர்பில் மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காரனமாக, நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related Articles

Back to top button