மலையகம்
இரத்தினபுரி பகுதியில் பஸ் விபத்து பலர் படுகாயம்
இரத்தினபுரி – காஹவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் கஹவத்த மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலையை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் கொடகவெல பகுதியில் இருந்து வந்த பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.