...
செய்திகள்

இரத்தினபுரி- பலாங்கொடை அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் 

அழகுமயில் வாகனமாய்க் கொண்ட கதிர்வேலோன்
மனங்குளிர எமக்கருள இங்கு எழுந்து விட்டானே
தளராத மனந்தந்து காத்தருள எங்கள் குமரன் 
தரணியிலே நமக்குத்துணை வந்துவிட்டானே
பலாங்கொடை நகரினிலே கோயில் கொண்ட கதிர்வேலோன்
நம் குறைகளையவென்று எழுந்து விட்டானே
கொடும்பகைகள் விலக்கியெமக் கருள் செய்து காக்கும் எங்கள் குமரன் 
திடங்கொண்டு நமைக் காக்க வந்துவிட்டானே
சிவனாரின் இளமகனாம் கதிர்வேலோன்
நம்பிக்கை
நமக்களிக்க எழுந்து விட்டானே
துன்பங்கள் தீண்டாத நிலை தந்து காக்கும் எங்கள் குமரன் 
மகிழ்வான வாழ்வளித்து அருளிடவே வந்துவிட்டானே
வேல் தாங்கி நின்றருளும் பெருமைமிகு கதிர் வேலோன்
வேதனைகள் நீக்கியெமைக் காக்க எழுந்து விட்டானே
மகிழ்ச்சி பொங்க நாம் வாழ வழியமைக்கும் எங்கள் குமரன் 
மானத்துடன் இந்நாட்டில் வாழ வழியமைக்க வந்துவிட்டானே
வள்ளி தெய்வானை அன்னையரை அருகு கொண்ட கதிர்வேலோன்
நம் வாழ்வின் நிம்மதியை உறுதி செய்ய எழுந்து விட்டானே
இன்பம் குன்றா வாழ்வை நாம் வாழச்செய்யும் எங்கள் குமரன் 
நம் குலத்தோர் நலன் காக்க வந்து விட்டானே
கேட்ட வரம் தந்தெம்மை வாழவைக்கும் கதிர்வேலோன் 
குறையில்லா நிறை வாழ்வைத் தந்தருள எழுந்து விட்டான் எங்கள் குமரன் 
இனியெமக்கு தலைதாழா நிலையுண்டு நம்பிடுவோமே.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen