...
செய்திகள்

இரத்தினபுரி- பலாங்கொடை இராசகலைத் தோட்டம் அருள்மிகு கருமாரி அம்மன் திருக்கோயில் 

காத்தருளும் கடமை கொண்ட கருமாரியம்மா
எங்கள் கருத்தினிலே நீயுறைந்து வழிகாட்ட வேண்டும்
நம்பிவந்து உன் பாதம் சரணடைந்தோம் நாங்கள்
நன்மைகளை வழங்கி எம்மை வாழவிடு அம்மா 
இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்தருளும் கருமாரியம்மா
இன்பநிலை தந்தெம்மை உயர்த்திவிட வேண்டும்
அண்டிவந்துன்னடியைச் சரணடைந்தோம் நாங்கள் 
அரவணைத்து, மகிழ்வுதந்து ஆறுதலையும் தருவாய் அம்மா 
மலைசூழ்ந்த பலாங்கொடையில் வீற்றிருக்கும் கருமாரியம்மா
மலைப்பில்லா பெருவாழ்வை எமக்களிக்க வேண்டும்
துணைநாடி உன்பாதம் சரணடைந்தோம் நாங்கள் 
உடனிருந்து காப்பளித்து காவல் செய்வாய் அம்மா 
இராசகலை பெருந்தோட்டம் கோயில் கொண்ட கருமாரியம்மா
இதயமதில் இனிமை பொங்கும் வாழ்வையே வழங்கிட வேண்டும்
தலைநிமிர்ந்து வாழ்வதற்கு உன்னடியே சரணடைந்தோம் நாங்கள் 
தரணியிலே நம்நலனைக் காத்து அருள் செய்வாய் அம்மா 
கவலைகளைக் களைந் தகற்றும் கருமாரியம்மா
காலமெல்லாம் நலன் பேணி காத்தருள வேண்டும்
உறுதி கொண்டு வாழ்வதற்கு உன்பாதம் சரணடைந்தோம் நாங்கள் 
உற்ற துணை நல்கி நலமருள்வாய் அம்மா 
கருவறை முதல் கல்லறை வரை இருந்தருளும் கருமாரியம்மா
கரவில்லா நல்வாழ்வை எமக்களிக்க வேண்டும்
நிம்மதியை நாடியுன் பாதம் சரணடைந்தோம் நாங்கள் 
நித்தமும் உடனிருந்து துணையாக இருந்தருள்வாய் அம்மா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen