இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகளவு நோயாளர்கள்

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டிலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இரத்தினபுரி மாவட்டத்தில் 1656 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிவித்திக்கலை பிரதேச செயலப்பிரிவிலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதுவரை இங்கு 232 டெங்கு நோயாளர்களும், குருவிட்ட செயலகப்பிரிவில் 159 பேரும், எஹலியகொடயில் 161 பேர், எலபாத்தயில் 159 பேர், இரத்தினபுரி நகரப் பகுதியில் 124 பேரும், இரத்தினபுரி பிரதேச சபைப் பகுதியில் 139 பேருக்கும் டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு பரவுவதை தடுப்பதற்கு டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை இல்லாதொழிக்க பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை நல்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் கேட்டுள்ளனர்.