...
செய்திகள்

இரத்தினபுரி வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியின் சாரதி, கொரோனா தொற்றால் மரணம்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த நோயாளர் காவு வண்டியின் சாரதி ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்துள்ளார்.

சுமார் 20 வருடங்களாக நோயாளர் காவு வண்டியின் சாரதியாகச் சேவையாற்றி வந்த நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பி.எப்.அமரவீர என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவர் கடந்த பல நாட்களாக கொரோனா நோயாளர்களை நோயாளர் காவு வண்டியில் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen