செய்திகள்

இராகலை உயர் தேசிய பாடசாலை இம்முறை வரலாற்று சாதனை படைத்து நுவரேலியா மாவட்டத்தில் சிறப்பிடம்  பிடித்தது.

1 வெளியான சாதாரண தர பெறுபேறுகளின்படி 06 மாணவர்கள்  9A சித்திகளை பெற்றும்  05 மாணவர்கள் 8A  சித்திகளையும் மேலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று 87% மாணவர்கள் உயர்தரத்திற்கு  சித்தியடைந்துள்ளனர். 
2020 ஆம் ஆண்டில் இரண்டு மாணவர்கள் 9A பெற்றிருந்தபோதும் இம்முறை பெறுபேறுகள் பலமடங்கு உயர்வடைந்துள்ளன. அதிபர் அவர்களின் சிறப்பான திட்டமிடலுடன் கூடிய வழிகாட்டலும், உப அதிபர்கள் ,பகுதி அதிபர்கள்,  ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் முறைகளும் மாணவர்களின் விடாமுயற்சியும்  பெற்றோர்களின் ஊக்குவிப்பும் வெற்றிக்கு வழிகோலின. தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு முதலாவது பெறுபேறுகள் வெற்றிகரமாக அமைந்தமை பாடசாலை நலன் விரும்பிகள் அனைவரிடத்தேயும் பெருமகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.  அடுத்த ஆண்டு தனது 75வது நிறைவை கொண்டாட காத்திருக்கும் தாய்ப்பாடசாலைக்கு இப் பெறுபேறுகள் மூலம்  கிரீடம் சூட்டிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 
சென்றமுறை பாடசாலை நிர்வாகத்தினருடன் இணைந்து பழைய மாணவர் சங்கமும் கருத்தரங்குகள், இடர்கால கற்றல் கையேடுகள் என கல்விக்கு கைகொடுக்கும் பல திட்டங்களை  பழைய மாணவர்களின் ஒத்துழைப்போடு முன்னெடுத்திருந்தது. இவ்வெற்றியின் போது அத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு மற்றும் நிதிப்பங்களிப்பு  நல்கிய அன்பார்ந்த பழைய மாணவ சொந்தங்களை நினைவுகூர்ந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சிகொள்கிறது.
"கல்வி ஒன்றே மாற்றத்தின் வழி"யாகி போன எமது  சமூகத்தின் திறவுகோல் இப்பாடசாலை. அதன் செயற்பாடுகளை மென்மேலும் வலுசேர்க்க பழைய மாணவர்கள் நாம் ஒன்றிணைவோம். 
75வது வருட நிறைவை அர்த்தமுடன் கொண்டாடுவோம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen