செய்திகள்

இராகலை உயர் தேசிய பாடசாலை மாணவி கின்னஸ் சாதனை நாட்டிய நிகழ்வில் பங்கேற்பு!!!

கொரோனா நிதிக்கு பங்களிப்பு செய்யும் வகையில் விரிவரங்க நிகழ்நிலை ஊடாக
உலகெங்கிலும் 850 நடனக்கலைஞர்கள் பங்கேற்ற மாபெரும் நடன நிகழ்வு, கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இலங்கையில் இருந்து 67 நடனக்கலைஞர்கள் பங்குபற்றியுள்ளனர். மலையகத்தில் இருந்து டெல்மார் மேற்பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட இராகலை உயர் தேசிய பாடசாலையின் மாணவி சௌந்தரராஜ் ஷக்தி பங்குபற்றி கின்னஸ் சாதனை சான்றிதழை பெற்று மலையக மண்ணுக்கும் எமது இராகலை உயர் தேசிய பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.  பங்குபற்றிய மாணவிக்கும் பயிற்றுவித்து இந்நிகழ்வில் பங்கேற்க வழிகாட்டிய ஆசிரியர் மற்றும் அதிபர் அவர்களுக்கும் பழைய மாணவர்களின்  மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பழையமாணவர் சங்கம் -இராகலை உயர் தேசிய பாடசாலை

Related Articles

Back to top button