...
நுவரெலியாமலையகம்

இராகலை தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வந்த நபர் 14 நாட்கள் விளக்கமறியலில்

ஐந்து உயிர்களை காவுக்கொண்ட இராகலை முதலாம் பிரிவு தீ விபத்து சம்பவம் தொடர்பாக இராகலை பொலிசாரால் விசாரணை செய்யப்பட்டு வந்த ஒருவரை இம்மாதம் (25) ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்க வலப்பனை நீதிமன்றம் நேற்று (12) மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்த உத்தரவை வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.குனதாச பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
இம்மாதம் (07) ஆம் திகதி இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் முதலாம் பிரிவில் தற்காலிக தனி வீடு ஒன்றில் இரவு 10.15 மணியலவில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றது.


இந்த தீ விபத்து சம்பவத்தில் ஆறு பேர் வசித்து வந்த வீட்டில் ஒரு வயது மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
சம்பவத்தில் இராமையா தங்கையா (வயது 61)
அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57),
ஆகியோருடன், மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான,சத்தியநாதன் துவாரகன் (13),(முதல் கணவரின் பிள்ளை) மற்றும்
தற்போதைய தந்தையான மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்தனர்.


மேலும் இந்த  தீ விபத்தில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தாயான தங்கையா நதியாவின் இரண்டாம் கனவருக்கு பிறந்த மோகனதாஸ் ஹெரோசனுக்கு முதலாவது பிறந்த நாள் இந்த சம்பவ தினத்தன்று இரவு கொண்டாடப்பட்ட பின்னரே தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதேநேரத்தில் இந்த விபத்து சம்பவத்தில் வீட்டில் வசித்து வந்த 
தங்கையாயாவின் மகனான இரவீந்திரன்.
(புலோக்கல் அடிக்கும் தொழில் செய்பவர்) மது போதையில் வீட்டுக்கு வெளியே இருந்த நிலையில் உயிர் தப்பியிருந்தார்.


அதேநேரத்தில் தீ விபத்து சம்பவத்தில் உயிர் நீத்தவர்களின் உடல்கள் நுவரெலியா மாவட்ட சட்ட வைத்தியர் பி.ராஜகுரு தலைமையில் வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.குணதாசவின் உத்தரவுக்கு அமைய பிரேத பரிசோதணை கடந்த (09) அன்று முன்னெடுக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 7.45 மணியலவில் இராகலை தோட்ட பரிச்சகாடு இலக்கம் 17 தேயிலை மழையின் பொது மயானத்தில் ஒரே புதை குழியில் அடக்கம் செய்யப்பட்டது.


இந்த  நிலையில் சம்பவம் தொடர்பில் இராகலை பொலிசார் உட்பட மேலும் பல பொலிஸ் குழுக்கள்  கடந்த நான்கு நாட்களாக  விசாரணையில் ஈடுப்பட்டு வந்திருந்தது.
இதன் போது சம்பவத்தில் உயிர் தப்பியிருந்த தங்கையாயாவின் மகனான இரவீந்திரனை இராகலை பொலிசார் விசாரணை  கடந்த இரண்டு தினங்களாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வந்தனர்.


இதன் போது தீ விபத்து சம்பவம் தொடர்பில் மர்மம் ஏற்பட்டிருந்த நிலையில் ஒரு சில உண்மைகள் வெளிவந்துள்ளது.
இதனடிப்படையில் சம்பவத்தில் உயிரிழந்தவரான தங்கையாவின் மகன் இரவீந்திரன் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இராகலை எறிபொருள் நிரப்பு நிலையத்தில் 
பெற்றோல் பெறப்பட்டதாகவும்,சம்பவத்தில் வீடு எறிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லையென பொய் கூறியதாகவும் பொலிசாருக்கு கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த நிலையில் நேற்று (12) பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.


இதையடுத்து இவர் மீது சமத்தப்பட்ட குற்றங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இவரை வலப்பனை நீதிமன்றத்தில் மாலை ஆஜர் செய்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரை இம்மாதம் (25) ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் டி.ஆர்.எஸ்.குணதாச உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் டி .சந்ரு

Related Articles

Back to top button


Thubinail image
Screen