செய்திகள்நுவரெலியாமலையகம்

இராகலை-தோட்டத்தொழிலாளர்களை கேவலமாக பேசிய வைத்தியருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

டீ .சந்ரு

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர் ஒருவருக்கு எதிராக, உடபுஸ்லாவ – இராகலை பிரதான வீதியின், டெல்மார் மத்திய சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று பிரதேச மக்களால் இன்று(29/07) முன்னெடுக்கப்பட்டது.

இராகலை டெல்மார் தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்றிரவு மோட்டார் சைக்கிள் வித்திற்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.பிரதேச மக்களால் மீட்கப்பட்ட குறித்த இளைஞன், உடபுஸ்ஸலாவ ஆதார வைத்தியசாலைக்கு முதலில் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு 2 மணிநேரமாகியும் வைத்தியர் வருகைத் தராதன் காரணமாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு இளைஞனை கொண்டுச் சென்றுள்ளனர்.

அங்கு நான்கு மணிநேரத்தின் பின்னரே இளைஞனை வைத்தியசாலையில்; அனுமதித்துள்ளனர்.

மேலும் அங்கு வருகைதந்த வைத்தியர் ஒருவர்,அங்கு இருந்தவர்களை தரகுறைவாக பேசியதாக தெரிவிக்கப்டுகின்றது.

இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தோட்ட தொழிலாளர்களை தரம்குறைவாக பேசிய வைத்தியருக்கு எதிராக இன்று காலை டெல்மார் தோட்ட மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு குறித்த வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Related Articles

Back to top button
image download