அரசியல்மலையகம்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நத்தார் வாழ்த்து செய்தி..

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நத்தார் தினத்தை கொண்டாடுவோம் என
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது நத்தார் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
 

இயேசுவின் பிறப்பு அகிலம் முழுவதற்கும் புதியதொரு செய்தியை சொன்னது, குழந்தை இயேசு பிறந்த இந்த இனிய நாளை நினைவுப்போற்றி நிற்கின்றது அந்த நத்தார் தினம்.
   

பொதுவாக பண்டிகை என்றாலே அதன் பண்பு உற்றார், உறவினர்கள் அன்பை அயலாருடன் கூடி குழாவி குடும்பமாய் உண்டு குதூகலிப்பதே என்பதாகும். 

துரதிஷ்டவசமாக இம்முறை நத்தார் தினத்தை கொண்டாடமுடியாதபடி COVID-19 கொரோனா தொற்று தடைபோட்டுள்ளது என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமாகிய ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
 

அவர் தமது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது சுகாதார அறிவுறுத்தல்களை அவசியம் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் எட்டப்பட்டுள்ளது.

எனவே கிருஸ்தவ சொந்தங்கள் கூடியவரை தமது வீடுகளிலிருந்து நத்தாரை கொண்டாடவேண்டும்.

அதேநேரம்  கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு இடம்கொடுக்காமல் இயேசு பிறப்பின் மகிழ்ச்சியை ஆலுக்கால்  பகிர்ந்துக்கொண்டு அனுஷ்டிப்பது சாலச்சிறந்தது என கருதுவதோடு சகலருக்கும் இதயம் நிறைந்த நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button