செய்திகள்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தி .”

உலக இஸ்லாமியர்களின் தியாகத்தின் மகத்துவத்தை உணர்த்தும் ஹஜ் பெருநாளிலே வாழ்த்துக்களை தெரிவிதித்துக்கொள்கின்றார் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்."
 முஸ்லிம் சகோதரர்கள் அல்லாஹ்வின் அருளினால் தியாக பெருநாளாம் ஹஜ் பெருநாளை இன்று மகிழ்ச்சியுடனும் உவகையுடனும் கொண்டாடுகின்றனர்.
   
 'ஈதுல் அழ்ஹா' எனப்படும் தியாகப் பெருநாள் இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரிய தியாகத்தை நினைவுப்படுத்திக் கொண்டாடுவதாகும். இஸ்லாத்தின் ஐந்தாவது கடமை "ஹஜ்"  கடமையாகும். அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் இந்நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றி இன்பமுடனும் ,நலமாகவும் வாழ வாழ்த்துகின்றேன் .
மேலும் இன்றைய காலகட்டத்தில் நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கம் மற்றும் சுகாதார துறையினர் கூறும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்நாளில் நாம் அனைவரும் சாந்தி,சமாதானம் ,சமத்துவத்துடனும் வாழ முஸ்லிம் சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

Related Articles

Back to top button