...
செய்திகள்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் கொவிட் – 19 நோய் பரவல்
காரணமாக அவதியுறும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண தொகை கிடைக்கப்பெறாத
5000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பண்டங்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை
வழங்கும் செயற்திட்டத்தின் மலையக பகுதிக்கான செயற்திட்டம் இ .தொ. கா
பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் பாராளுமன்ற
உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களின் பங்குபற்றலில் இந்தவாரம்
தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது .

இதன் ஒரு கட்டமாக ஹட்டன் நகரசபை பகுதிக்கு உற்பட்ட அலுத்கல பகுதியின்
இ .தொ .கா இளைஞர் அணி அமைப்பாளர் திரு சத்யா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
ஹட்டன் நகர சபை தலைவர் திரு பாலச்சந்திரன் மற்றும் உறுப்பினர் திரு ரத்ன
குமார் அவர்களினூடாக வழங்கி வைக்கப்பட்டது.

இதன்பொழுது இ.தொ.காவின் இளைஞரணி பொதுச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ,அமைச்சரின்
பிரத்தியேக உதவியாளர் திரு தயாளன், நகர சபை உறுப்பினர் திரு ரத்னகுமார்
மற்றும்
இ .தொ .கா இளைஞரணி பிரதேச அமைப்பாளர் சத்யா ஆகியோர் கலந்துக்கொண்டனர் .

Related Articles

Back to top button


Thubinail image
Screen