Breaking Newsசெய்திகள்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன்பாக துப்பாக்கிப் பிரயோகம்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சூட்டுச் சம்பவமானது இன்று (21) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வேளையிலேயே அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அதிகாரி, பொலிஸில் சரணடைந்துள்ளார்.

Related Articles

Back to top button