அரசியல்

இராஜினாமா செய்வதற்கு தான் தயாரில்லை பிரதமர்

இராஜினாமா செய்வதற்கு தான் தயாரில்லை பிரதமர்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தான் தயாரில்லை – என்று மஹிந்த ராஜபக்ச மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அத்துடன், எவருக்கும் அஞ்சி, பதவியைவிட்டு ஓடவும் மாட்டேன் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுடன் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே, பிரதமரால் மேற்படி அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) நடைபெற்றது.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சங்கத்தினர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது அரசோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினரால், தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பிரதமர் ஊடகப்பிரிவு
https://www.youtube.com/watch?v=ilTsiSiYLFY

Related Articles

Back to top button