செய்திகள்

இராணுவத்தில் சிரேஷ்ட மட்டத்தினருக்கு பிரிகேடியர் பதவி.

இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட பிரிகேடியர்கள் 05 பேருக்கு பதவி உயர்வு
வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய, சிரேஷ்ட
பிரிகேடியர்களாக செயற்பட்ட ஐவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் மேஜர்
ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பிரிகேடியர் மனோஜ் லமாஹேவா
பிரிகேடியர் தம்மி ஹேவகே
பிரிகேடியர் அஜித் திசாநாயக்க
பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன
பிரிகேடியர் லால் சந்திரசிறி ஆகியோர் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி
உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை இராணுவத்தின் விசேட படையணியிலுள்ள 560 பேருக்கு இன்று பதவி
உயர்வு வழங்கப்பட்டது.

விசேட படையணியை சேர்ந்த பெருமளவானர்கள் ஒரே தடவையில் பதவி உயர்த்தப்படும்
முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவ விசேட படையணியின் 24 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த
பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button