...
செய்திகள்

இராணுவ விளையாட்டு போட்டியில் இரு பதக்கங்களை வென்ற மலையக வீராங்கனை

இலங்கை இராணுப் படையணிகளுக்கிடையில் வருடந்தோறும் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டி அண்மையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

இதன்போது இராவணத்தின் பொது சேவைப் படையணியைப் (பொது சேவா பலக்காய) பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்ட பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்பிரிங்வெளி தோட்டத்தின் மேமலைப் பிரிவைப் பிறப்பிடமாகக் கொண்ட மூர்த்தி தமிழ்ச்செல்வி என்ற வீராங்கனை இரு வெண்கலப் பதக்கங்களை வெற்றிக் கொண்டு மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவரது குழு 4× 400 அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளதோடு, 10 கிலோமீற்றர் போட்டி நடைப் போட்டியில் 3ஆம் இடத்தை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen