விளையாட்டு

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி அமீரகம் பயணம்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள 2021 ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கவுள்ளது.

குறித்த போட்டிகள் ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இந்த போட்டிகளில் ஓமான் அணியுடன் இரு இருபதுகு்கு – 20 போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோர் 03 ஆம் திகதி ஓமானிலிருந்து பயணிக்கவுள்ளதாக இலங்கை கிரிகெட் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் மற்றும் 09 திகதிகளில் தனது மைதான பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு ஓமானுக்கு எதிரான இரண்டு ஆட்டங்களைத் தொடர்ந்து, ஒக்டோபர் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில், இருபதுக்கு – 20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன், ஐசிசி ஏற்பாடு செய்த இரண்டு உலகக் கிண்ண பயிற்சி ஆட்டங்களில் இலங்கை விளையாடவுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen