செய்திகள்

இரு தடவைகள் தடுப்பூசி செலுத்தியமையால் பெண் மயக்கம்; கண்டியில் சம்வம்.

கண்டி ஒகஸ்டாவத்த தோட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது பெண்ணொருவருக்கு இரண்டு தடவைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண் மயக்கமுற்ற நிலையில் கண்டி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் தடுப்பூசி பெற்றுக்கொண்டதன் பின்னர் வீடு திரும்பிய பின்னரே மயக்கமுற்றுள்ளார் என்றும் இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

இதனையடுத்து பெண்ணின் கணவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related Articles

Back to top button