சமூகம்

இரு வேறு இடங்களில் சடலங்கள் மீட்பு!

செவனகல – தினுஷகம பிரதேசத்தில் அமைந்துள்ள வனவிலங்கு அலுவலிகத்திற்கு முன்னால் ஓடை வீதியொன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்தவர் செவனகல எகமுதுகம பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை , மீரிகம – இதிபரபே பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

70 வயதுடைய முதியவரொரின் சடலமொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button