செய்திகள்

இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள
இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம்
வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (29) மத்திய வங்கி ஆளுநர்
அஜித் நிவாட் கப்ரால் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள
இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக வர்த்தகர்களும் பொதுமக்களும் எதிர்கொண்டுள்ள
சிரமங்களை கருத்தில் கொண்டு கௌரவ பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் இது தொடர்பில்
தீர்வை முன்வைக்கவுள்ளார்.

பிரதமர் ஊடக பிரிவு

Related Articles

Back to top button


Thubinail image
Screen