செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கும் கட்டுப்பாட்டு விலை!

இறக்குமதி செய்யப்படும் அரிசிகளுக்கும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுமென வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அரிசிகளுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து, நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில் வர்த்தமானி
வெளியிடப்பட்டது.

இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசிகளுக்கான கட்டுப்பாட்டு விலையாக 210 ரூபா நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன், ஒரு கிலோகிரம் நாடு அரிசிக்கு 220 ரூபாவும், சம்பா அரிசிக்கு 230 ரூபாவும், கீரி சம்பாவுக்கு 260 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே, எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுமென வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button