செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் சில உணவுப்பொருட்களின் விலை குறைப்பு.

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கான தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் செத்தல் மிளகாய்க்கான தீர்வை வரியை 25 ரூபாவிலிருந்து 05 ரூபா குறைத்து 20 ரூபாவாக அறவிட வாழ்க்கைச் செலவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் மீனுக்கான தீர்வை வரியை 100 ரூபாவிலிருந்து 25 ரூபா குறைத்து 75 ரூபாவாக அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும் வாழ்க்கைச் செலவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related Articles

Back to top button