செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலை அதிகரிக்குமா.?

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

உலக சந்தைகளில் பால்மாக்களின் விலைகள் மற்றும் கப்பல் கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டத்திற்கு அமைய பால்மாக்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 350 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பொதியின் விலையை 140 ரூபாவாலும் அதிகரிக்க அனுமதியளிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் பால்மா பொதி 945 ரூபாவிற்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றது. இறக்குமதி நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கமைய பால்மா விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 1,295 ரூபாவாக உயர்வடையும்.

இதேவேளை, நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் பால்மா விலைகளை அதிகரிப்பது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்களின் நலனை கருத்திற் கொண்டு பால்மா விலைகளை அதிகரிக்கபோவதில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

எனினும் இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையேற்றம் தொடர்பில் மீண்டும் பரிசீலனை செய்யுமாறு குறித்த நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

baby milk bottle isolated on white background

Related Articles

Back to top button