செய்திகள்

இறந்த நிலையில் கரையொதுங்கிய மற்றுமொரு கடலாமை

இலங்கையின் கடற் கரை ஓரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளன. கொழும்புத் துறைமுக கடற்பரப்பில் அண்மையில் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்திற்குள்ளாகிய நிலையில் கடலில் மூழ்கியுள்ளது.

இதனையடுத்து, கடலாமைகள், திமிங்கிலகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இவ்வாறு கடலாமையொன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய கடலாமையின் உடல், உடற்கூற்று பரிசோதனைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button