செய்திகள்

இறுதி அறிக்கை தொடர்பாக ஆராய நாளை கூடுகிறது தெரிவுக்குழு

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவுக்குழு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடி இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பது குறித்து ஆராயவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மே மாதம் 22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

இதுவரை காலமாக மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் பெற்றுக்கொண்ட சாட்சியங்கள் அனைத்தையும் கொண்டு அறிக்கையை இறுதி செய்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதி சாட்சியம் வழங்கியதை அடுத்து அனைத்து சாட்சியப்பதிவுகளும் நிறைவடைந்துள்ளதை அடுத்து அறிக்கை வழங்குவதற்காக அதன் கால எல்லை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதேவேளை இதற்கு முன்னர் குறித்த தெரிவுக்குழுவின் கால எல்லையை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றம் அனுமதி வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button