இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்.

uthavum karangal

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தாரிக் முஹம்மத் அரிஃபுல் இஸ்லாம், தனது தகுதிச் சான்றினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று (11) திங்கட்கிழமை கையளித்தார்.

கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இதனை சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராக பதவியுயர் பெற்ற ரியாஸ் ஹமீதுல்லா, நெதர்லாந்து உயர் ஸ்தானிகராக பதவியுயர்வு பெற்று சென்றுள்ளார்.

இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பங்களாதேஷ் குடியரசு அரசாங்கத்தால் இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்