...
செய்திகள்

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் எரிக் லாவெரடு மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் எரிக் லாவெரடு மற்றும் தோட்ட வீடமைப்பு
மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்
ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பொருளாதாரம் வர்த்தகம், சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர்கள்
கலந்துக்கொண்டிருந்தனர்.

மேலும் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள்
ஆகியவற்றுக்கு பிரான்ஸ் தூதுவர் நன்றி தெரிவித்தார் தூதரகங்கள் ஊடாகவும்
பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்திட்டத்தினூடாகவும்
அமைச்சின் ஊடாகவும் சிறு நடுத்தர பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும்
அமைச்சரின் பரிந்துரைக்கு அமைய பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர்
செயற்றிட்ட அறிக்கை கையளித்தார்.

இதன்மூலம் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சிறு நடுத்தர உற்பத்தியாளர்களை
ஊக்குவிப்பதோடு சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைக்கு பிரான்ஸ் அரசு நேரடி
பங்களிப்பை வழங்கும் என பிரான்ஸ் தூதுவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜீ, குமாரசிரி பிரதமரின் இணைப்புச்
செயலாளர் செந்தில் தொண்டமான், அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் மொஹமட் காதர்,
பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, இ.தொ.காவின்
கொழும்பு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரகு இந்திரகுமார், தூதரக அதிகாரிகள்
உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen