செய்திகள்

இலங்கைக்கான – புதிய கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகருக்கும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பு ..

இலங்கைக்கான – கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராக அண்மையில் பதவி யேற்றுள்ள  அதிரா அவர்களை,தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்   சந்தித்து உரையாடினார்.

இலங்கைக்கான-கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலய இல்லத்தில் இடம்பெற்ற இந்த  சந்திப்பில்  இந்திய உயர்தானிக செயலாளர் கிருஷ்னபிரசாத் ,பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பரத் அருள்சாமி மற்றும் அமைச்சரின் இணைப்பு செயலாளர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது ஆகஸ்ட் (15)கொண்டாடப்பட்ட இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உதவி உயர்ஸ்தானிகராக பதவியேற்றுள்ள   டாக்டர் ஆதிரா அவர்களுக்கு பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் ஞாபக சின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார்.

அத்துடன் இந்த சந்திப்பில்  மத்திய மாகாணம், ஊவா மாகாணங்களில் இடம்பெறும் கல்வி அபிவிருத்தி,உட்பட இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இடம் பெற்று வரும் வீட்டுத்திட்டம் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இலங்கை,இந்திய இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைதிட்டம் தொடர்பாகவும், மலையகத்திலுள்ள பின்தங்கிய பாடசாலைகளின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button