உலகம்செய்திகள்

‘இலங்கைக்குச் செல்ல வேண்டாம்’

இலங்கை உள்ளடங்களாக 14 நாடுகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத் தடை விதித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் நேற்று பயணத்தடை குறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் (WAM) தெரிவித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமீபியா, சாம்பியா, காங்கோ, உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாபிரிக்கா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button