செய்திகள்

இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று ஐரோப்பிய பாராளுமன்றில் நிறைவேற்றம்.. !

இலங்கையில் அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை (பி.டி.ஏ) ரத்துச் செய்யுமாறு கோரி ஐரோப்பிய பாராளுமன்றினால் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், இலங்கைக்கான ஜி.​எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை மற்றும் அதனுடன் தொடர்பான மரபுகளை மீறுவதாக அமைந்துள்ளதாக குறித்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் 705 பேரில் 628 பேர் இலங்கைக்கு எதிரான யோசனைக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் 15 பேர் யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மேலும் 40 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

ஜி.​எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு மீண்டும் கிடைத்திருந்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்வது உள்ளிட்ட 27 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் 3 தீர்மானங்களை நிறைவேற்றியது. ஸ்பெயின் / மொராக்கோ எல்லையிலும், ரஷ்யாவிலும், இலங்கையிலும் மனித உரிமை நிலைமைகள் குறித்தே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மிக சமீபத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையின் ஆபத்தான சரிவு குறித்து ஐரோப்பிய பாராளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com