செய்திகள்

இலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர் : திடீர் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் (Julie J. Chung) பெயரை பரிந்துரைத்துள்ளார்.

வௌ்ளை மாளிகை நேற்று இது குறித்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

தற்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலெய்னா பி ரெப்லிட்ஸ் பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு பதிலாகவே ஜூலி சங் என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தென் கொரியரான ஜூலி சங், தற்போது அமெரிக்காவின் வெளியுறவுத்துறையில் பதில் உதவிச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், சீனா, வியட்நாம், ஈராக், கொலம்பியா ஆகிய நாடுகளுக்கான இராஜதந்திரியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Julie Chung – Image credit: Un Yarat]/Flickr

Related Articles

Back to top button