செய்திகள்

இலங்கைக்கு வருபவர்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியீடு ..

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகள் உட்பட சகல பயணிகளும் பின்பற்ற வேண்டிய தனிமைப்படுத்தல் ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குள் நுழையும் போது வெளிவிவகார அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புபட்ட நிறுவனங்கள் அல்லது சுற்றுலா சபைகளின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தில் வழங்கப்படும் சுகாதார தகவல்கள் உள்ளடக்கிய படிவத்தை பூர்த்தி செய்து சுகாதார பிரிவுக்கு ஒப்படைக்க வேண்டும். இதேவேளை நாட்டுக்கு வருகை தருபவர்கள் கொவிட்19 தடுப்பூசி ஏற்றி இரண்டு வார காலம் கடந்திருக்க வேண்டும்.

தடுப்பூசி ஏற்றப்பட்டதற்கான சான்றின் மூலப்பிரதியை இதன்போது சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்று வேறு மொழிகளில் அமையப் பெற்றிருப்பின் ஆங்கில மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்யபட்டிருக்க வேண்டும்.

நாட்டிக்குள் நுழைந்த பின்னர் 24 மணி நேரத்திற்குள் சுகாதார அமைச்சின் அனுமதி பெற்ற தனியார் இரசாயன கூடங்களில் பிசீஆர் பரிசோதனை நடத்த வேண்டும்.

இதேவேளை நாட்டுக்கு வருகை தருபவர்கள் தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் ஆலோசனை வழிகாட்டல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button