...
செய்திகள்

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது

கடந்த ஒக்டோபர் மாதத்தில் 22,771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 68 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10 மாத காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60,000 ஐக் கடந்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்தியாவிலிருந்து 18,466 பேர் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுதவிர, ஐக்கிய அரபு இராச்சியம், ஜெர்மனி, கஸகஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகளும் இலங்கை வந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


Related Articles

Back to top button


Thubinail image
Screen