செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு 292 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்தேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 292 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஒவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 291 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 292 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஆரோன் பின்ச் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஜெப்ரி வென்டர்சே 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Related Articles

Back to top button