செய்திகள்

இலங்கையின் மிக வயதான பெண் 117வது வயதில் மரணம்.

இலங்கையின் மிக வயதான பெண்மணியாகக் கருதப்பட்ட களுத்துறை, தொடங்கொடையைச் சேர்ந்த ‘வேலு பாப்பானி அம்மா’ என அழைக்கப்படும் மூதாட்டி இன்று (29) பிற்பகல்  காலமானார்.

இறக்கும் போது அவருக்கு 117 வயது என தெரிவிக்கப்படுகின்றது.

1903, மே 03 ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார்.

இவர் வயதான பெண்களில் ஆசியாவில் இரண்டாவது இடத்தைப் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதியோருக்கு அரசாங்கம் வழங்கும் அடையாள அட்டையின் மூலம் அவரது வயது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் (2019), ஒக்டோபர் 01 ஆம் திகதியான சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர்கள் தினத்தன்று, இந்நாட்டின் மிகவும் வயதான பெண் எனத் தெரிவிக்கும் சான்றிதழை, முதியயோருக்கான தேசிய கவுன்சில் வழங்கியிருந்தது.

பாப்பானி அம்மா இரு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கக்படுகிறது.

வேலு பாப்பானி அம்மா, 117 வயதாக இருந்தபோதிலும் மிகவும் ஆரோக்கியமாகவே இறுதி வரை வாழ்ந்ததாக, தொடங்கொடை பிரதேச செயலாளர் தர்ஷனி ரணசிங்க தெரிவித்தார்

Related Articles

Back to top button