
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மொழி, மதம், மற்றும் கலாசாரம் ஆகிய பகிரப்பட்ட பாரம்பரியங்களின் அடிப்படையிலான பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உறவுகள் தொடர்பில், பிரதமர் மோடி தமது வாழ்த்து செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டுகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்து, மக்களின் செழுமை மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் என இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.