செய்திகள்

இலங்கையிலும் உலக நாடுகளிலும் வலுப்பெறும் வெள்ளைக் கவண் போராட்டம்!

முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்களின் சடலங்களை பலவந்தமாக எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான கண்டன ஆர்பாட்டம் நேற்று(21) முற்பகல் பொரளை மயானத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.

குறித்த ஆர்பாட்டத்தை ”விடுதலை இயக்கம்” ஏற்பாடு செய்ததுடன், மூவின மக்களும் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். இதன் போது வெள்ளை சீலையை கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திருந்தனர்.

அத்துடன் நாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாட்களில் 20 நாட்களேயான சிசுவின் தகனத்திற்கு எதிராக வெள்ளைக் கவண் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா நாட்டின் டொரண்டோ நகரில் கார் அணிவகுப்பொன்று இடம்பெற்றிருந்ததுடன், கனடா வாழ் இலங்கையர்கள் தமது வாகனங்களில் ஜனாசா எதிர்ப்பு பதாதைகளை ஏந்திய வண்ணம், கோசங்களை எழுப்பி எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அத்துடன் இத்தாலி நாட்டின் மிலான் நகரிலும் ஜனாஸாக்களை எரிப்பது தொடர்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம் பெற்றிருந்தது.

இத்தாலி வாழ் இலங்கையர்கள் பதாதைகளை ஏந்தி, கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button