செய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் ; உயிரிழப்பு 2,425 ஆக உயர்வு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 51 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (06/16) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 31 ஆண்களும், 20 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 2,425 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் மேலும் 2,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தினார்.

தொற்றுடன் அடையாளங் காணப்பட்ட அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அதற்கமைய நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 33 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,289 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button