செய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பல நாட்டு தலைவர்களின் கண்டனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன் கண்டனம்

இன்று இலங்கையின் 3 தேவாலயங்கள் மற்றும் விருந்தகங்கள் சிலவற்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கடுமையான கண்டித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஒன்று கூடியிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தமது அவதானம் திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துயரமான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து இருப்பதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்தார்.

இந்த வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக தான் பிரார்த்தனை செய்வதாக பாப்பரசர் குறிப்பிட்டுள்ளார்.

 

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் இன் கண்டனம்

இதேவேளை , இலங்கையில் இன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

தேவாலயங்கள் மற்றும் விருந்தகங்கள் உட்பட்ட இடங்களில் இன்று இடம்பெற்ற தாக்குதல்களின் போது ஏராளமான உயிர்கள் பலினானது தமக்கு கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் அவர் தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன் கண்டனம்

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்கள் குறித்து தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்க மக்களின் முக்கிய தினங்களில் ஒன்றான உயிர்த்த ஞாயிறு தினத்தில் இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதனை எந்தக் காரணம் கொண்டும் ஏற்கமுடியாது எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com